KVKG STARS
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உடல் நலத்திற்கு உதவும் காய்கறிகள்

Go down

உடல் நலத்திற்கு உதவும் காய்கறிகள் Empty உடல் நலத்திற்கு உதவும் காய்கறிகள்

Post by Butterfly_Pinki Mon Mar 04, 2013 11:58 pm

[You must be registered and logged in to see this image.]

தக்காளி:


தக்காளியை நாம் பல விதங்களில் உணவில் பயன்படுத்துகிறோம். இதில், ஏ, பி, சி., ஆகிய வைட்டமின்கள், அதிகளவில் உள்ளன. மஞ்சளும், பச்சையும் கலந்த நிறத்தில் இருக்கும் தக்காளியில் தான் சத்துக்கள் அதிகம். காயாக சேர்த்தால் கூட நல்லதுதான். முழு சிகப்பு தக் காளியை உணவில் சேர்க்க வேண் டாம். ஏனெனில், அதிகளவில் அமிலச்சத்து இருக்கும். சூப் தயாரிப்ப தற்கு, பழமும், காயும் கொண்ட பக்குவத்தில் உள்ள தக்காளிப் பழமே ஏற்றது.


உருளைக் கிழங்கு:

உருளைக்கிழங்கு, வாயுத் தொல்லையை ஏற்படுத்தும். எனவே, குறைந்த அளவிலேயே உருளைக் கிழங்கை சேர்த்துக்கொள்ள வேண்டும். பூண்டு, இஞ்சி போன்றவற்றை உருளைக் கிழங்குடன் சேர்த்தால், வாயுத் தொல்லை இருக்காது. உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்கள், உருளைக் கிழங்கை அறவே தவிர்த்திட வேண்டும்.


வாழைக்காய்:

வாழைக்காய் பல விதங்களில் நமக்கு நல்லது. முற்றிப் போன வாழைக்காயில் கூட்டு, அவியல், சிப்ஸ் போன்றவற்றை தயாரிக்கக் கூடாது. இளம் பக்குவத்தில் உள்ள வாழைக்காயே சமைப்பதற்கு ஏற்றது. குண்டாக இருப்பவர்கள், வாரத்தில் இரண்டு முறை, குறைந்த அளவில் வாழைக்காய் சாப்பிட்டு வர, உடல் எடை குறையும். வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் வாழைக்காய் நல்லது.


பீர்க்கன் காய்:

பீர்க்கன் காயை பலர் வேண்டாத காயா கவே நினைக்கின்றனர். ஆனால், இதன் மகத்துவம் மிகப் பெரியது. இது வயிற்று உபாதைகளை நீக்கும் தன்மை கொண் டது. உடலை வலுவாக்கும். ஆண்மையை அதிகரிக்கச் செய்யும். பீர்க்கன்காயின் சாறு ரத்தத்தை சுத்தமாக்கும்.


பச்சைப் பட்டாணி:

பச்சைப் பட்டாணியை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். பச்சை நிற சாயம் ஏற்றப்பட்ட பட்டாணியை, இன்று பெரும்பாலான காய்கறி கடைகளில் விற்பனை செய்கின்றனர். எனவே, தோலோடு வாங்கி பின், தோலை நீக்கி பயன்படுத்தலாம். சாயம் ஏற்றப்பட்ட பட்டாணி, உட லுக்கு கேடு விளைவிக்கும். பச்சைப் பட்டாணியில், வைட்டமின் ஏ, சி., ஆகிய சத்துக்கள் உள்ளன. உடல் வளர்ச்சிக்கும், ரத்த விருத்திக்கும் ஏற்றது.


வாழைத்தண்டு:

வாழைப் பூ, வாழைத் தண்டு எல்லாமே, உடல் நலத்திற்கு நன்மையே செய்கிறது. மண்ணை தின்கிற குழந்தைகளுக்கு அவசியம் வாழைத்தண்டு கொடுக்க வேண்டும்.


பீட்ரூட்:

பீட்ரூட்டை கண்டால், பலரும் பயப்படுகின்றனர். உண்மையில், இது அதிகம் சத்துக்கள் கொண்ட காய்கறி. உடலில் ரத்தத்தை அதிகரிக்கும். வாரத்தில் மூன்று, நான்கு நாட்கள் கூட கூட்டு, பொரியல் செய்து சாப்பிடலாம்.


முட்டைகோஸ்:

முட்டை கோஸ், காலிப்ளவர் போன்றவற்றில் நார் சத்துக்கள் உள்ளன. சருமக் கோளாறுகளுக்கும், இதை சாப்பிட்டு வரலாம்.


வெள்ளரி:

பி, சி., வைட்டமின் சத்துக்கள் நிறைந்த காய் வெள்ளரி. இதை, தோலுடன் சாப்பிடுங்கள். சாப்பிடுவதற்கு முன், கழுவி சாப்பிடவும். உணவாக செய்தும் சாப்பிடலாம். உணவாக செய்வது என்றால், அரை வேக்காடு போதும்.
Butterfly_Pinki
Butterfly_Pinki

Posts : 41
Join date : 2013-03-04

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum